காதல் திருமணம் செஞ்சவங்க தான் அதிகமா டைவர்ஸ் கேட்குறாங்க - உச்சநீதிமன்றம் ஆதங்கம்
காதல் திருமணம் செய்தவர்களே அதிக அளவில் விவாகரத்து கோருவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காதல் திருமணம்
இந்தியாவில் திருணங்கள் என்பது ஒரு கலாச்சார நிகழ்வு. மற்ற நாடுகளில் பொருளாதார அடிப்படையில் திருமணங்கள் நிர்ணயிக்கப்படும் போது இந்தியாவில் மட்டும் சாதி, மதம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.

இந்த வகை திருமணங்கள் சாதிய கட்டமைப்பை வளர்ப்பதாக இருந்தாலும், பாதுகாப்பானதாக இருப்பதால் பெண்கள் இதில் அதிக நம்பிக்கை வைத்திருக்கின்றனர். இந்நிலையில், இதை தகர்க்கவே சமீபத்தில் காதல் திருமணங்கள் அதிகரித்து வருகின்றன.
விவாகரத்து
உச்சநீதிமன்றத்தில் விவாகரத்து தொடர்பான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. இதனை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சஞ்சய் கரோல் சேர்ந்த அமர்வு விசாரித்தது. அப்போது, இரண்டு பேரையும் சமரசம் செய்து வைக்க முயற்சித்தனர்.
ஆனால், சமரசத்திற்கு கணவர் உடன்படவில்லை. இந்நிலையில், விவாகரத்து கோருபவர்கள் 6 மாதம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்ற தீர்ப்பின் அடிப்படையில் தம்பதிகளுக்கு உடனடியாக விவாகரத்து வழங்கப்பட்டது.
விவகாரத்து கோரியவர்கள் காதல் திருமணம் செய்தது விசாரணையின் போது தெரியவந்தது.
அதில் பேசிய நீதிபதிகள், இந்தியாவில் காதல் திருமணம் செய்தவர்களே அதிக அளவில் விவாகரத்து கோருவதாக தெரிவித்துள்ளனர்.