இப்படி மெசேஜ் வந்தா ஓபன் பண்ணிராதீங்க - ரொம்ப கவனமா இருங்க!

Money
By Sumathi Nov 19, 2023 10:39 AM GMT
Report

உலகளவில் இணைய மோசடிகள் அதிகரித்து வருகிறது.

Scam Message

McAfee நிறுவனம், குளோபல் ஸ்கேம் மெசேஜ் ஸ்டடி’ (Global Scam Message Study) எனும் ஆய்வை நடத்தியது. இதில், இந்தியா உள்பட ஏழு நாடுகளைச் சேர்ந்த 7000 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

scam messages alert

செயற்கை நுண்ணறிவு (AI) காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். இதன்மூலம், இந்தியர்கள் நாள் ஒன்றுக்கு 12 மோசடி செய்திகளை பெறுகின்றனர். இதனை அடையாளம் காண வாரத்திற்கு 1.8 மணிநேரம் செலவிடுகிறார்கள்.

ஈ.பி பில் கட்டவில்லை.. மெசேஜ் வந்தால் கிளிக் பண்ணாதீங்க - மின் வாரியம் எச்சரிக்கை!

ஈ.பி பில் கட்டவில்லை.. மெசேஜ் வந்தால் கிளிக் பண்ணாதீங்க - மின் வாரியம் எச்சரிக்கை!

கவனம்

82% இந்தியர்கள் போலி செய்திகளை நம்பி ஏமாந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 64 விழுக்காட்டினர் அறிவிப்புகள் அல்லது சலுகைகள் குறித்த குறுஞ்செய்திகளிலும், 52 விழுக்காட்டினர் வங்கி சார்ந்த எச்சரிக்கை செய்திகளிலும் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

இப்படி மெசேஜ் வந்தா ஓபன் பண்ணிராதீங்க - ரொம்ப கவனமா இருங்க! | Most Dangerous Sms That Most People Lose Money

பரிசை வென்றுள்ளதாக வரும் போலி தகவல்கள் : 41%, தவறவிட்ட டெலிவரி: 23%, வாங்காத பொருளை வாங்கியதாக வரும் தகவல்கள்: 24%, உள்நுழைவு மற்றும் இருப்பிட சரிபார்ப்பு செய்திகள்: 24% உண்மையாக இருப்பதை போன்று இருக்கும் செய்திகள் மற்றும் விஷயங்கள் போலியாக இருக்கவும் அதிக வாய்ப்புள்ளது என்பதை மறவாதீர்கள்.

குறுஞ்செய்திகள், சமூக வலைத்தளப் பதிவுகள், ஆபத்தான இணைப்புகளைத் தடுக்க மோசடி பாதுகாப்பு சாப்ட்வேரை பயன்படுத்துங்கள்.