குறைந்த செலவு தான்.. ஆனால் வசதியான வாழ்வு தரும் நாடுகள் - அதில் இந்தியா?
குறைந்த செலவில் வசதியான வாழ்க்கை தரும் நாடுகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.
வசதியான வாழ்க்கை
2024 இன்டர்நேஷனல் ஸ்டடி நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. வாழ்க்கைச் செலவு, நிதி நிலைமையில் திருப்தி, மற்றும் குடும்ப வருமானம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
உலகளவில் 174 இடங்களில், 12,000-திற்க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் பங்கேற்றனர். அதில், வியட்நாம் தொடர்ந்து 4-வது ஆண்டாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
குறைந்த செலவில்..
தென்கிழக்கு ஆசிய நாடுகளான வியட்நாம், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து ஆகியவை முதல் 10 இடங்களில் உள்ளன. முதல் 10 இடங்களில் 6 இடங்களை ஆசிய நாடுகள் பிடித்துள்ளது. குறிப்பாக இந்தியா 6-வது இடத்தைப் பிடித்துள்ளது.
முதல் 10 இடங்கள்: 1. வியட்நாம் 2. கொலம்பியா 3. இந்தோனேஷியா 4. பனாமா 5. பிலிப்பைன்ஸ் 6. இந்தியா 7. மெக்ஸிகோ 8. தாய்லாந்து 9. பிரேசில் 10. சீனா