உலகிலேயே அதிக சம்பளம் தரும் நாடுகள் இதுதானாம் - இந்தியா நிலைமை தெரியுமா?
உலக அளவில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சராசரி மாத சம்பளம் குறித்த புள்ளி விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
மாத சம்பளம்
வேர்ல்ட் ஸ்டாட்டிஸ்டிக்ஸ் நிறுவனம் 40க்கும் மேற்ப்பட்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த தரவுகளின்படி, உலக அளவில் உள்ள 23 நாடுகளில் சராசரி மாதச் சம்பளம் ₹ 1 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.
அதிக சம்பளம் வழங்கும் முதல் 10 நாடுகளில் சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க், சிங்கப்பூர், அமெரிக்கா, ஐஸ்லாந்து, கத்தார், டென்மார்க், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்தியா 65வது இடம்
சராசரி மாதச் சம்பளம் வழங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 65வது இடத்தில் உள்ளது. 50 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக உள்ளது. துருக்கி, பிரேசில், அர்ஜென்டினா, இந்தோனேசியா,
கொலம்பியா, பங்களாதேஷ், வெனிசுலா, நைஜீரியா, எகிப்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்தியாவை விட குறைவாக சராசரி மாத சம்பளம் வழங்கும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.