முதல் மாத சம்பளம்.. தவறவிட்டு கதறிய பெண் - நன்றி சொல்லி ஷாக் கொடுத்த நபர்!
முதல்மாத சம்பளத்தை அம்மாவுக்கு அனுப்ப முயன்று, தவறுதலாக வேறு ஒருவருக்கு அனுப்பிவிட்ட இளம்பெண் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
முதல் மாத சம்பளம்
மலேசியாவைச் சேர்ந்த ஃபஹதா பிஸ்தாரி என்ற இளம்பெண், தான் வாங்கிய முதல்மாத சம்பளத்தை, ஆசை ஆசையாய் தன்னுடைய அம்மாவுக்கு ஆன்லைனில் அனுப்பியிருக்கிறார். ஆனால், எதிர்பாரத விதமாக அந்தப் பணம் வேறு யாரோ ஒருவருக்கு சென்றுவிட்டது.
பணத்தைப் பெற்றவரும் அதை திருப்பித்தராமல், இருந்துள்ளார். இது குறித்து சம்பந்தப்பட்ட பெண், டிக்டாக்கில் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், ``இன்று நான் என்னுடைய முதல்மாத சம்பளத்தை வாங்கினேன்.
மாற்றி அனுப்பிய பெண்
கொஞ்சநாள் மட்டுமே வேலைக்குச் சென்றிருந்ததால், சம்பளமும் குறைவுதான். இருப்பினும் அந்தப் பணத்தை என்னுடைய அம்மாவுக்கு அனுப்ப நினைத்தேன். முதல்மாத சம்பளம் என்பதால் பெரும் உற்சாகத்திலிருந்த நான்,
ஆன்லைனில் அம்மாவுக்குப் பணத்தை அனுப்பும்போது சரியாகக் கவனிக்கவில்லை. பின்னர் பணம் அனுப்பிய ரெசிப்ட்டை வைத்து அம்மாவிடம் கேட்டபோது தான், நான் வேறு யாருக்கோ பணத்தை மாற்றி அனுப்பியது எனக்கே தெரிந்தது.
நன்றி சொன்ன நபர்
அதையடுத்து, பணம் அனுப்பப்பட்ட நம்பரை வைத்து அந்த நபரைத் தொடர்புகொண்டபோது, அந்த நபர் `தானமாகக் கொடுத்ததாக நினைத்துக் கொள்ளுங்கள்' என்று கூறிவிட்டார்" எனக் கண்ணீருடன் பேசினார். அதனையடுத்து,
அந்த நபர் அடுத்த நாள் பணத்தை திருப்பி அனுப்பிவிட்டார். இதை சற்றும் எதிர்பராத அந்த பெண், அந்த நபர் தன்னை பயப்படுத்துவதற்காக சற்றுநேரம் முன் வெறுமனே அவர் நாடகமாடியதை தெரிந்து கொண்டு நன்றி தெரிவித்தார்.