பூச்சிகளே இல்லாத நாட்டில் கொசு கண்டுபிடிப்பு - எப்படி வந்தது தெரியுமா?
ஐஸ்லாந்து நாட்டில், முதன் முதலாக கொசு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஐஸ்லாந்து
ஐஸ்லாந்து, உலகில் கொசுக்களே இல்லாத நாடு என்று பரவலாக அறியப்படுகிறது. இனப்பெருக்கம் செய்யத் தேவையான, நிலையான மிதமான வெப்பநிலை இல்லாததால், அங்கு கொசுக்கள் இல்லாமல் இருந்தன.
ஆனால், பருவநிலை மாறுபாடு பிரச்னை காரணமாக, ரெய்க்ஜாவிக் நகரின் தென்மேற்கில் உள்ள பனிப்பாறை பள்ளத்தாக்கான கிஜோசில் கொசுக்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது,
அக்டோபர் 16ஆம் தேதி பொழுது சாயும் போது ஒரு புது விதமான பூச்சி பறப்பதை நான் படம் பிடித்துள்ளேன். உடனே நான் சந்தேகமடைந்து அதை சேகரித்தேன். இரு பெண், ஒரு ஆண் பூச்சிகளை கண்டறிந்துள்ளார். அதை பூச்சி ஆராய்ச்சியாளர் மத்தியாஸ் ஆல்பிரட்சனுக்கு அனுப்பினார்.
கொசு கண்டுபிடிப்பு
அப்போதுதான் அவை கொசுக்கள் என உறுதி செய்யப்பட்டன. இந்த கொசு வட ஆப்பிரிக்கா டூ வட சைபீரியாவில் வசிக்கும் குலிசேட்டா அன்னுலட்டா இனத்தை சேர்ந்த கொசு. இந்த வகை கொசு, குளிர் பிரதேசங்களிலும் வாழும்.
பனியே பெய்தாலும் அங்கும் இந்த கொசுக்கள் இருக்கும். இந்த கொசு கப்பல் அல்லது கன்டெய்னர்கள் மூலம் வந்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பநிலை உயர்வு, நீண்ட கோடைக்காலம் மற்றும் மிதமான குளிர்காலம் ஆகியவை
கொசுக்கள் செழித்து வளரச் சாதகமான சூழலை உருவாக்குகின்றன. இதனால்தான் ஐஸ்லாந்தில் இத்தனை சவாலான சூழலிலும் இந்த கொசுக்கள் நீடித்திருக்கின்றன என தெரிவித்துள்ளார்.