Friday, Jul 11, 2025

இந்த நாட்டில் மட்டும் கொசுவை கொள்வது ஒரு பாவச்செயல் - எங்கு தெரியுமா?

World
By Vinothini 2 years ago
Vinothini

Vinothini

in உலகம்
Report

கொசுக்களை இந்த நாட்டில் மட்டும் கொள்ளமாட்டார்கள்.

கொசுக்கள்

ஒரு உயிரினத்தை கொள்வது தவறு, அது ஒரு பாவச்செயல். பல நாடுகளில் மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளையும் கொல்லக்கூடாது என்று சட்டங்கள் உள்ளது. ஆனால் இதெல்லாம் பூச்சிகளுக்கு பொருந்தாது. கொசுக்கள் டெங்கு மற்றும் மலேரியா நோய்களை பரப்புவதாக அரசாங்கமே கொல்கிறது.

mosquito-killing-is-a-sin-in-this-country

அது கடித்தால் நாமே சாதாரணமாக அடித்து கொல்லுவோம். ஆனால் இங்கு ஒரு நாட்டில் கொசுக்களை கொள்வது கூட பாவம் என்று கொள்ளமாட்டார்கள். அது நம் நாட்டின் அருகிலுள்ள பூடான் தான். பூடான் நாடு புத்த மதத்தை பின்பற்றும் நாடு, எந்த உயிரையும் கொல்வது பாவம் என புத்த மதம் கூறுகிறது. இதனால் இங்கு கொசுக்களை கொல்வதற்கு அனுமதியில்லை.

டான்ஸ் ஆடிய மின்மினிப் பூச்சிகள்.. இயற்கை அழகை தத்ரூபமாக படம் பிடித்த புகைப்பட கலைஞர்!

டான்ஸ் ஆடிய மின்மினிப் பூச்சிகள்.. இயற்கை அழகை தத்ரூபமாக படம் பிடித்த புகைப்பட கலைஞர்!

பாவச்செயல்

இந்நிலையில், அந்த நாட்டில் கொசுக்களை கொன்றுவிடக்கூடும் என பூச்சிக்கொல்லிகளை அரசாங்கம் பயன்படுத்துவதைக் கூட மக்கள் எதிர்க்கிறார்கள். எந்த உயிரினத்தை கொல்வதையும் அவர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். சமீபத்தில் கூட இங்கு மலேரியாவும் டெங்குவும் நாடு முழுவதும் பரவின.

mosquito-killing-is-a-sin-in-this-country

அந்த சமயத்தில் கூட மக்கள் பூச்சிக்கொல்லிகளை தெளிக்க மறுத்துவிட்டார்கள். பெரும்பாலும் இங்குள்ள மக்கள் தங்கள் வீட்டின் சுவர்களை பசுஞ்சானம் மற்றும் களிமண் கொண்டு பூசுகிறார்கள். அதனால் பூச்சிக்கொல்லிகளுக்கு இங்கு தேவையே இருப்பதில்லை. தற்பொழுது கால மாற்றத்தால் நோய்களை பரப்பும் கொசுக்களை கொல்வதில் எந்த தவறும் இல்லை என பூடான் மக்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.