சிறையில் முடியல ஐயா .. கொசுக்களை கோர்ட்டுக்கு கொண்டு வந்த தாதா : மும்பையில் அரங்கேறிய விநோத வழக்கு
சிறையில் கொசு தொல்லை அதிமாக உள்ளதால் தனக்கு கொசுவலை வேண்டும் என கொசுவை பிடித்து நீதிமன்றத்திற்கு வந்துள்ளார் பிரபல குற்றவாளி ஒருவர் இந்த சம்பவம் மும்பை நீதிமன்றத்தில் அரங்கேறியுள்ளது.
கொசு தொல்லை
மும்பை குண்டு வெடிப்பு வழக்கின் குற்றவாளியான தாவூத் இப்ராகிமின் கூட்டாளியான இஜாஜ் லக்ட்வாலா பல வழக்குகளில் கடந்த 2000 - ம் ஆண்டு கைது செய்யப்பட்டு நவி மும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையிக்சிறையில் தனக்கு கொசு தொல்லை அதிகமாக இருப்பதால் தனக்கு கொசு வலை வழங்க வேண்டும் என்று மும்பை செசன்ஸ் நீதிமன்றத்தில் ல்க்டவாலா மனு தாக்கல் செய்திருந்தார் இதற்காக நேற்று நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கைதி தொடர்ந்த வழக்கு
அப்போது நீதிபதியிடம் : சிறையில் கொசு தொல்லை தாங்க முடியவில்லை , இதோ பாருங்கள் சிறையில் பிடித்த கொசுக்களை என்று பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து வைத்திருந்த கொசுக்களை காண்பித்தார்.
சிறை நிர்வாகம் எதிர்ப்பு
பின்னர் கைதிகளுக்கு கொசு வலை வேண்டும் என கோரிக்கை வைத்தார்.அதே சமயம் அவரது கோரிக்கைக்கு சிறை நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது , கொசு வலையினை கைதிகள் சிலர் தற்கொலை செய்து கொள்ள பயன்படுத்த வாய்ப்பு இருப்பதால் கொசு வலை பயனபடுத்த அனுமதியில்லை என சிறை நிர்வாகம் தெரிவித்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதி மன்றம் தாதா ல்க்டாவின் மனுக்களை தள்ளுபடி செய்தது , மேலும் கொசு வலைக்கு பதிலாக கொசு விரட்டிகளை பயன்படுத்த உத்தரவிட்டது , மேலும் கொசுக்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தவிட்டார்.