பாபர் மசூதியே கோவிலை இடித்துதான் கட்டப்பட்டது - வானதி ஸ்ரீனிவாசன்..!
உண்மையான சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டுமென்றால் திமுகவினர் ராமர் கோவில் நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
வானதி செய்தியாளர்கள் சந்திப்பு
ஜனவரி 22ல் மிகவும் பிரமாண்டமாக அயோத்தியில் கும்பாபிஷேக விழா நடக்கவுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி உட்பட பல பாஜகவினர் கோவில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை டவுன்ஹால் காளியம்மன் கோவிலில் பாஜக எம்.எல்.ஏவும், தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் தூய்மை பணிகளை செய்தார்.
கோவிலை இடித்து....
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முதலில் அயோத்தியிலிருந்த கோவிலை இடித்துவிட்டு தான் பாபர் மசூதியே கட்டப்பட்டது என உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்டது என்பதை சுட்டிக்காட்டி, உதயநிதியை கருத்திற்கு பதிலடி கொடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுகவினர் உண்மையான சமத்துவத்தைக் காட்டவேண்டுமென்றால் ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் ஜல்லிக்கட்டு போட்டியை கோவிலிலிருந்து பிரிப்பது முட்டாள்தனத்திற்குச் சமம் என விமர்சித்தார்.