இஸ்லாமியர்களிடம் ஏன் இந்த பயங்கரவாதம்?.. எதிராக இந்தியா நிற்க வேண்டும் - ஹமாஸ் தலைவரின் மகன்!
ஹமாஸ் தலைவரின் மகன் பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியர்களின் ஆதரவு குறித்து பேசியுள்ளார்.
நிகழ்ச்சி
ஹமாஸ் நிறுவனர் ஹசன் யூசுப்பின் மகன் மொசாப் ஹசன் யூசப் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியர்கள் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். இது குறித்து பேசிய அவர், "இஸ்லாமிய பயங்கரவாதத்தை எந்த வடிவத்திலும் ஏற்க மாட்டோம் என்பதை உலகெங்கிற்குச் சொல்லுங்கள், ஹமாஸ் அமைப்பினர் நெடுங்காலமாகவே பொதுமக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அவர்கள் ஆலயங்கள், பேருந்துகள், சந்தைகள், மளிகைக் கடைகள், கடற்கரை கிளப்புகள், இரவு விடுதிகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றைக் குறிவைத்துத் தாக்கியுள்ளனர். இது ஒன்றும் புதிதல்ல" என்று கூறினார்.
இந்தியாவின் ஒற்றுமை
இதனை தொடர்ந்து, அவர், "உங்களுக்கு தெரியும், இந்தியர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இந்துக்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. மற்ற உலகத்துடன் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர்கள் ஒன்றாக வாழ்கிறார்கள்.
கிறிஸ்தவர்கள் கூடவே வாழ்கிறார்கள், யூதர்களுடன் வாழ்கிறார்கள். அப்படியென்றால் எப்பொழுதும் இஸ்லாமியர்களிடம் இருந்து மட்டும் ஏன் இந்த வன்முறை வருகிறது. நிச்சயமாக எல்லா இடங்களிலும் தீவிரவாதிகள் இருக்கிறார்கள்.ஆனால் அதைவிட பெரிய அளவில் இஸ்லாமியர்களிடம் இருந்து வருவதை நாம் பார்க்கிறோம்" என்று கூறியுள்ளார்.