காலையில் டீ, காஃபி குடிப்பவரா நீங்கள்? இந்த புற்றுநோயே வராதாம்..
டீ, காஃபி குடிப்பது குறித்த ஆய்வில் ஆச்சர்ய தகவல் வெளியாகியுள்ளது.
டீ, காஃபி
டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் நம்மில் அதிகப் பேருக்கு இருக்கும். இந்த பழக்கம் சில புற்றுநோய்களின் அபாயத்தையும் குறைக்கிறதாம். தற்போதைய காலகட்டத்தில் புற்றுநோய் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இதுகுறித்த ஆய்வுகளும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆய்வு ஒன்றில், டீ அல்லது காபி குடிப்பதால் தலை, கழுத்து, வாய் மற்றும் தொண்டை புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைகிறது.
புற்றுநோய் அபாயம்
ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு கப் காபி குடிப்பதால் இது நிகழ்கிறது. அதே நேரத்தில் ஒரு கப் டீ குடித்தால் ஒன்பது சதவிகிதம் ஆபத்தை குறைக்கிறது. காஃபின் நீக்கப்பட்ட காபியை குடிப்பதால், வாய்வழி புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை 25 சதவீதம் குறைக்கிறது என்பது தெரியவந்துள்ளது.
தலை மற்றும் கழுத்து புற்றுநோய் மிகவும் பொதுவானது. 2020ல் கிட்டத்தட்ட 745,000 புதிய பாதிப்புகள் மற்றும் 364,000 இறப்புகள் பதிவாகியுள்ளது. காபி மற்றும் டீயில் உள்ள காஃபின் போன்ற பையோகெமிக்கல் காம்பௌண்ட்ஸ் ஆன்டிஇன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டுள்ளது.
எனவே காபி, டீ குடிப்பது மட்டுமே தலை மற்றும் கழுத்து புற்றுநோயைக் குறைக்க தீர்வாகாது. சீரான உணவுகளை உட்கொள்வது, தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது மற்றும் மருத்துவ பரிசோதனை போன்றவை முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.