வெறும் வயிற்றில் 1 டம்ளர் பீட்ரூட் ஜூஸ் குடிங்க போதும் - சட்டுனு ஏறும் பாருங்க!
பீட்ரூட் ஜூஸ் மூலம் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.
பீட்ரூட் ஜூஸ்
பீட்ரூட்டில் துத்தநாகம், இரும்பு, அயோடின், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், நைட்ரேட், ஃபோலேட், மாங்கனீஸ், வைட்டமின் சி, வைட்டமின் பி-6 ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது.
பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரத்த அழுத்தம், தடகள செயல்திறன், இதய ஆரோக்கியம் மற்றும் மூளை ஆரோக்கியம் மேம்படுகிறது.
பலன்கள்
எனவே தினமும் காலையில் 1 டம்ளர் பீட்ரூட் சாறு குடித்தால் பல நன்மைகள் கிடைக்கும். உடல் எடையை குறைக்க வேண்டுமானால் பீட்ரூட் சாறு அருந்தலாம். இதில் கலோரிகள் குறைவு. இருப்பினும், மனித உடலுக்குத் தேவையான அனைத்து வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கிடைக்கின்றன.
சருமத்தில் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்கும். சுருக்கங்கள், கரும்புள்ளிகள், முதுமையின் பிற அறிகுறிகளைக் குறைத்து சரும ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கிறது. இதிலுள்ள பீட்டாலைன்கள் சருமத்துக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால், சருமம் பளபளப்பாக இருக்கும்.
இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் முகப்பரு, அரிப்பு போன்ற பிரச்னைகளை தவிர்க்க உதவுவதால், சருமத்துக்கு கூடுதல் பொலிவு கிடைக்கிறது. இதில் உள்ள இரும்புச்சத்து இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் மற்றும் ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க உதவுகிறது.