ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க
ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை நிர்வகிப்பது தொடர்பான தகவல்களை தெரிந்துக்கொள்வோம்.
வங்கி கணக்கு
இந்தியாவில் வங்கிக் கணக்கு திறப்பதற்கு எந்த வரம்பும் இல்லை. வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கையில் ரிசர்வ் வங்கி எந்த வரம்பையும் நிர்ணயிக்கவில்லை. எனவே, பெரும்பாலான மக்கள் 3 முதல் 4 சேமிப்புக் கணக்குகளை வைத்துள்ளனர்.
சிலர் இதைவிட அதிகமான வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். இதில், நீண்ட காலமாக உங்கள் வங்கிக் கணக்கை நீங்கள் உபயோகிக்காமல் இருந்தால், வங்கி உங்கள் கணக்கை மூடலாம். உங்கள் எல்லா கணக்கையும் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.
விதிமுறைகள்
அதேநேரம் அனைத்து வங்கிகளும் சம்பளக் கணக்கைத் தவிர சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பை வைத்திருப்பதைக் கட்டாயமாக்கியுள்ளன.இதைச் செய்யவில்லை என்றால், உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து குறிப்பிட்ட தொகை எடுக்கப்படும்.
மேலும், ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளுக்கான குறைந்தபட்ச பணம், வங்கியில் இருந்து பெறும் மெசேஜ் சேவைக்கான கட்டணம், டெபிட் கார்டு கட்டணம் போன்றவற்றை பார்த்துக்கொள்வது அவசியம். இதனால் தேவையான கணக்குகளை மட்டும் வைத்துக் கொள்வதே சிறந்தது.