Google Pay பயன்படுத்துபவரா நீங்கள்? இனி இதற்கெல்லாம் கட்டணம் செலுத்த வேண்டும்
கூகுள் பே இனி பில் செலுத்த கட்டணம் வசூலிக்க உள்ளது.
கூகுள் பே
டிஜிட்டல் யுகத்தில் ஒருவருக்கு பணம் அனுப்புவது தொடங்கி, ரீசார்ஜ் செய்வது, பில் செல்லுவது வரை UPI செயலிகளையே கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர்.
இந்தியாவின் UPI சந்தையில், Google Pay, PhonePe, Paytm ஆகியவை ஆதிக்கம் செலுத்துகின்றன. இதில் google Google Pay செயலியை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். கடந்த ஜனவரி மாதம் மட்டும், கூகுள் பே மூலம் ரூ.8.26 லட்சம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் நடந்துள்ளது.
0.5% முதல் 1% வரை கட்டணம்
முன்னதாக அனைத்து சேவைகளையும் இலவசமாக வழங்கி வந்த கூகுள் பே, கடந்த ஆண்டு ரீசார்ஜ் செய்வதற்கு ரூ.3 கட்டணம் வசூலிக்க தொடங்கியது. இதை Convenience Fee என்ற பெயரில் வசூலிக்கிறது.
கூகுள் பே செயலி மூலம் கேஸ் சிலிண்டர் பில், மின்சார பில் போன்ற பயன்பாடு சம்பந்தமான பில்களுக்கு கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தினால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூகுள் பே அறிவித்துள்ளது.
நீங்கள் கட்டணம் செலுத்தும் தொகையில் 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை கட்டணம் வசூலிக்கப்படும். இந்தக் கட்டணத்தைத் தவிர அதற்கான ஜிஎஸ்டியையும் செலுத்த வேண்டும்.