ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் வைத்துள்ளீர்களா? இனி நடவடிக்கை - மத்திய அரசு
வங்கி கணக்குகள் குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
வங்கி கணக்குகள்
டிஜிட்டல் பரிவர்த்தனையில் வங்கி கணக்கு என்பது முதன்மையான ஒன்றாக இருக்கிறது. இந்தியாவில் வங்கிக் கணக்கு திறப்பதற்கு எந்த வரம்பும் இல்லை.
வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கையில் ரிசர்வ் வங்கி எந்த வரம்பையும் நிர்ணயிக்கவில்லை. எனவே, பெரும்பாலான மக்கள் 3 முதல் 4 சேமிப்பு கணக்குகளை வைத்துள்ளனர்.
மத்திய அரசு விளக்கம்
இந்நிலையில், ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களிடம் அபராதம் விதிக்கப்படும் என தகவல் ஒன்று பரவி வைரலானது.
தற்போது அதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக
ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இது போலியான தகவல் என்று மத்திய அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான பத்திரிகை தகவல் அலுவலக சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.