இனி ஹெல்மெட் போடலனா.. லைசன்ஸ் ரத்து.. அரசு முடிவு - எப்போது அமலுக்கு வரும் தெரியுமா?
ஹெல்மெட் போடாவிட்டால் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என்று அரசு அதிரடி முடிவு எடுத்துள்ளது.+
ஹெல்மெட்
கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது, புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அரசியல் கட்சிகளின் தொடர் எதிர்ப்பினால் கட்டாயம் என்பது விலகி விழிப்புணர்வு மட்டுமே அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகம் நடக்கும் காரணத்தால் மீண்டும் ஜனவரி தொடக்கத்தில் இருந்து புதுச்சேரியில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது.
அரசு முடிவு
இதனை பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையில், முக்கிய சாலை மற்றும் சந்திப்புகளில் போலீசார் பேண்ட் வாத்தியம் இசைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அப்படி ஜனவரி 1 ஆம் தேதி முதல் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பின்னால் அமர்ந்திருக்கும் நபரும்
தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை இயக்கினால், ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், 3 மாதங்கள் வரை ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.