குட்டைப்பாவாடை பெண்களை குறிவைத்த டாக்டர் - சிக்கிய 3200 வீடியோக்கள்!
குட்டைப்பாவாடை பெண்களை குறிவைத்த டாக்டர் ஒருவர் வீடியோக்கள் எடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குட்டைப்பாவாடை
சிங்கப்பூரைச் சேர்ந்தவர் டாக்டர் ஜூ பென் வி. இவர் தன்னுடைய ஷூவில் ரகசிய கேமராவைப் பொருத்தி மருத்துவமனை, மால்கள், பொது இடம், ஜூனியர் கல்லூரிகள் என பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் வலம் வந்துள்ளார்.

இதன்மூலம் குட்டைப்பாவாடை அணிந்த பெண்களின் அந்தரங்கப் பகுதியை தொடர்ந்து வீடியோ எடுத்துள்ளார். இதுவரை 3200க்கும் அதிகமாக வீடியோக்களை எடுத்துள்ள டாக்டர் போலீஸாரிடம் சிக்கி உள்ளார். அப்போது அவருக்கு 3ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ரகசிய கேமரா
மேலும், அவரது பெயர் மருத்துவ பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் மருத்துவக் கவுன்சிலுக்கான (SMC) ஒழுங்குமுறை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள SMC, ''பல சந்தர்ப்பங்களில்

இதுமாதிரியான குற்றச்செயல்களில் ஈடுபட்ட மருத்துவர் ஒருவரை தொடர்ந்து தொழில் ரீதியில் அனுமதிப்பது மக்கள் மத்தியில் எதிர்மறை விமர்சனங்களை உண்டாக்கும். அதனால் அவரது லைசென்ஸ் ரத்து செய்யப்படுகிறது’’ எனக் குறிப்பிட்டுள்ளது.
டாக்டர் கைது
கல்லூரிகள், மால்கள் போன்ற இடங்களில்தான் ஜூ பென் அதிக வீடியோக்களை ரெக்கார்ட் செய்துள்ளார். கிட்டத்தட்ட 630க்கும் மேற்பட்ட பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இந்த வீடியோக்களை மருத்துவர் எடுத்துள்ளார்.
பள்ளி விழாவில் மாணவர்போல சீருடை அணிந்துகொண்டு 97 வீடியோக்களை ஜூ எடுத்துள்ளார். இவரை பார்த்த மாணவர்கள் சிலர் ஆசிரியரிடம் புகாரளிக்கவே போலீசில் சிக்கியுள்ளார் ஜூ. இந்த குற்றச்சம்பவம் தெரியவந்தபோது ஜனவரி 2018ம் ஆண்டு முதன்முறையாக ஜூ பென் கைது செய்யப்பட்டார்.
பின்னர் ஜாமினில் வெளிவந்தபோதும் ஜூவின் வீடியோ எண்ணத்தில் எந்த மாற்றமும் இல்லை. அவர் தொடர்ந்து பெண்களின் குட்டைப்பாவாடை வீடியோவை எடுத்து வந்துள்ளார். அடுத்தடுத்து அவர் சிக்கவே மொத்தம் 3 முறை ஜூ கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜூவிடம் இருந்து ரகசிய கேமரா, கேமரா பொருத்துவதற்கான சிறப்பு ஷூக்கள், மெமரி காடுகள், ஐபோன் உள்ளிட்ட சாதனங்களை கைப்பற்றி உள்ளனர்.