100க்கும் மேற்பட்ட நாய்கள் கொலை - உடல்கள் குப்பையில் வீசப்பட்ட கொடூரம்
தெலுங்கானாவில் 100க்கும் மேற்பட்ட நாய்கள் கொலை செய்யப்பட்டு குப்பையில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
100க்கும் மேற்பட்ட நாய்கள் கொலை
தெலுங்கானா மாநிலம் ஷாமிர்பேட்டை பகுதியில் உள்ள குப்பையில் ஒரே இடத்தில் 100க்கும் மேற்பட்ட நாய்கள் கொலை செய்து குவிக்கப்பட்டுள்ள வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஷாமிர்பேட்டை மண்டல் துர்பாகபள்ளியில் 100க்கும் மேற்பட்ட 100க்கும் மேற்பட்ட நாய்கள் கொல்லப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், நாய்களை கொல்ல கிராம பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது.இதன் காரணமாக ஒரே இரவில் இத்தனை நாய்கள் கொன்று குப்பையில் வீசப்பட்டுள்ளன என்று கூறினர்.
குவியும் கண்டனங்கள்
இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கொத்துக்கொலை ஒரு வழி அல்ல என கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் நாய்களுக்கு அரசாங்கத்தால் கருத்தடை செய்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஒரே இரவில் 100க்கும் மேற்பட்ட நாய்கள் கொலை செய்யப்பட்டு குப்பையில் வீசப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.