தமிழ் எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கெல்லாம் நான் இருப்பேன் : ஆளுநர் தமிழிசை
தமிழ் எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கெல்லாம் தமிழிசை செளந்தரராஜன் இருப்பேன் என தமிழிசை கூறியுள்ளார்.
பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 133ஆவது பிறந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, அரசியல் தலைவர்கள் பாரும் பாரதி தாசனின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.
பாரதிதாசன் பிறந்த நாள் :
பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 133ஆவது பிறந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, அரசியல் தலைவர்கள் பாரும் பாரதி தாசனின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

புதுச்சேரியில் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவையொட்டி, புதுச்சேரி அரசு கலைப்பண்பாட்டுத்துறையின் சார்பில் 10 ஆண்டுகளுக்கு பிறகு கலைமாமணி விருதுகள் விழா நடைபெற்று வருகிறது; இவ்விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழ் இருக்கும் இடமெல்லாம்
இந்த நிலையில், ஆளுநர் தமிழிசை, தமிழ் எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கெல்லாம் தமிழிசை செளந்தரராஜன் இருப்பேன்; தமிழ்தாய் வாழ்த்தை வைத்தே அரசியல் நடக்கின்றது; பாரதிதாசன் பாடலை தமிழ்தாய் வாழ்த்தாக பாடி, புதுச்சேரி அரசு அவருக்கு புகழ் சேர்க்கின்றது என தெரிவித்துள்ளார்.