இந்தியா தாண்டி உலகில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் நாடு எது தெரியுமா? ஆச்சர்ய தகவல்!
உலகில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் 3வது நாடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்துக்கள்
உலகில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் முதல் நாடாக இந்தியா உள்ளது. இங்கு 96.63 கோடி இந்துக்கள் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் 79 சதவீதம் பேர் உள்ளனர்.
ஆனால் மொத்த மக்கள்தொகை சதவீதத்தின்படி பார்த்தால், அண்டை நாடான நேபாளத்தில்தான் இந்துக்களின் சதவீதம் அதிகம். அங்கு மொத்த மக்கள் தொகையில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்துக்கள் தான். 2021ஆம் ஆண்டு மத்திய புள்ளியியல் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,
மொரிஷியஸ்
ஒரு காலத்தில், நேபாளம் ஒரு இந்து தேசமாக இருந்தது. ஆனால் 2006 இல் அது மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. இங்கு வைணவம், சைவம், பௌத்தம், சாக்த செல்வாக்கு மிக்கவையாக உள்ளன. இந்நிலையில், இந்த இரு நாட்டிற்கும் அடுத்தபடியாக மொரிஷியஸ் உள்ளது.
50 சதவீதத்திற்கும் அதிகமான இந்துக்கள் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் 48.5 சதவீதம் இந்துக்கள். தற்போது, 51% எட்டியிருப்பதாக கருதப்படுகிறது. ஆப்பிரிக்க கண்டத்தில் அதிக இந்தியர்களைக் கொண்ட நாடாக மொரிஷியஸ் மாறியுள்ளது.
இந்த அரசின் பெரும்பாலான பிரதமர்கள், அமைச்சர்கள், பொருளாதார மற்றும் நிர்வாக அலுவலர்கள் இந்துக்கள்.
ஒப்பந்த வேலை மூலம் மொரீஷியஸில் இந்து மதம் பரவத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.