ஒரு கல்யாணம்..3 கள்ள உறவு..இந்துக்கள் குறித்து ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் சர்ச்சை கருத்து

Viral Video Uttar Pradesh Relationship
By Sumathi Oct 16, 2022 10:37 AM GMT
Report

ஒரு முறை திருமணம் செய்து கொண்டு மூன்று பேரை வைத்து கொள்கிறீர்கள் என ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் பேசியுள்ளார்.

 ஷௌகத் அலி 

உத்தரபிரதேச மாநில ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் ஷௌகத் அலி ஒரு நிகழ்ச்சியில் பேசிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதன் அடிப்படையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பாலில் நடந்த ஒரு கூட்டத்தில் அவர்,

ஒரு கல்யாணம்..3 கள்ள உறவு..இந்துக்கள் குறித்து ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் சர்ச்சை கருத்து | Owaisi Party Leader Charged Hindus Remark Marriage

முஸ்லிம்களுக்கு குழந்தைகள் அதிகம் என்கிறார்கள். சில நேரங்களில் நாங்கள் இரண்டு முறை திருமணம் செய்து கொள்கிறோம் என்று சொல்கிறார்கள். ஆம், நாங்கள் இரண்டு முறை திருமணம் செய்துகொள்கிறோம் என்பது உண்மைதான்.

3 கள்ள உறவு

ஆனால், இரு மனைவிகளுக்கும் மரியாதை கொடுக்கிறோம், ஆனால், நீங்கள் ஒருவரை மணந்து மூன்று பேரை வைத்துக்கொள்கிறீர்கள். இது யாருக்கும் தெரிவதில்லை. அவர்களில் யாருக்கும் நீங்கள் மரியாதை கொடுப்பதில்லை" என்றார்.

832 வருடங்களாக கைகளை பின்னால் மடக்கி சலாம் போட்ட உங்களைப் போன்ற புழு பூச்சிகளை ஆண்டவர்கள் நாங்கள். இப்போது எங்களை மிரட்டுகிறீர்கள். நம்மை விட மதச்சார்பற்றவர் யார்? அக்பர் ஜோதா பாயை மணந்தார்.

விளக்கம்

எங்களுடன் சேர்ந்து உங்கள் மக்களையும் உயர்த்துகிறோம். ஆனால், உங்களுக்கு ஒரு பிரச்சினை. ஒரு இந்து துறவி முஸ்லிம்கள் கொல்லப்பட வேண்டும் என்கிறார். ஏன்? நாங்கள் என்ன கேரட், முள்ளங்கி, வெங்காயமா? " என்றார்.

இந்த வீடியோ வைரலானதையடுத்து, தான் எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தவரையும் குறிப்பிடவில்லை என ஷெளகத் அலி விளக்கம் அளித்துள்ளார்.