நீங்க குழந்தை பெத்துக்கிட்டா மட்டும் போதும்; அவ்வளவு சலுகை - எங்கு தெரியுமா?
அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்களுக்கு அரசு பல சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
மக்கள் தொகை
சீனாவின் ஸ்டேட் கவுன்சில் சமீபத்தில் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில், பிரசவத்திற்கான மானியங்கள் மற்றும் பல குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு வரி குறைப்பு.
குழந்தை பராமரிப்பு சேவைகளை விரிவுபடுத்துதல், கல்வி, வீட்டுவசதி, வேலைவாய்ப்பு ஆதரவை மேம்படுத்துதல் மற்றும் பிரசவ உதவி திட்டங்களை மேம்படுத்துதல் மற்றும், சிறந்த மகப்பேறு நன்மைகள், நீட்டிக்கப்பட்ட மகப்பேறு விடுப்பு,
அரசு சலுகை
மானியங்கள் மற்றும் குழந்தைகளுக்கான மேம்படுத்தப்பட்ட சுகாதார சேவைகள் ஆகியவை இதில் அடங்கும். இதன் மூலம் குழந்தை வளர்ப்பை ஊக்குவிக்கும் ஒரு சமூக சூழலை மேம்படுத்துவதையும், பிரசவ மானிய முறையை மேம்படுத்துவதையும் அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
தற்போது, அங்கு மக்கள் தொகை 1.4 பில்லியனாக உள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டு பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவுக்கு குறைந்துள்ளது. சுமார் 300 மில்லியன் மக்கள் 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களாக உள்ளனர்.
இது மொத்த மக்கள் தொகையில் சுமார் 21.1% பேர்.
முன்னதாக முந்தைய ஆண்டு 280 மில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.