பூமியை விட நிலவின் நேரம் வேகமாக ஓடுகிறது...நாசாவின் பகீர் தகவல் - விளைவுகள் என்ன?

NASA World
By Swetha Jul 12, 2024 06:21 AM GMT
Report

பூமியை விட நிலவின் நேரம் வேகமாக ஓட தொடங்கியுள்ளதாக நாசா கூறியுள்ளது.

நிலவின் நேரம் 

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, தற்போது நிலவின் தென் துருவத்தில் மனிதர்களை அனுப்ப திட்டமிட்டிருக்கிறது. அதற்காக மனிதர்கள் தரையிறங்கக்கூடிய சில இடங்களை கண்டறிந்துள்ளது. நிலவின் தென் துருவமானது சூரியனில் இருந்து விலகி நிரந்தரமாக நிழலாக இருக்கும் ஒரு பகுதி ஆகும்.

பூமியை விட நிலவின் நேரம் வேகமாக ஓடுகிறது...நாசாவின் பகீர் தகவல் - விளைவுகள் என்ன? | Moons Time Passes Faster Than Earth Reveals Nasa

இதுவே மனிதர்கள் கால் பதிக்க வசதியான பகுதி என கண்டறிந்துள்ளனர். கடந்த 1969ம் ஆண்டு நாசா தனது அப்போலோ திட்டம் மூலம் நிலவுக்கு முதல் முறையாக மனிதர்களை அனுப்பி வரலாறு படைத்தது. அதன்பின், தற்போது மீண்டும் நிலவு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

செவ்வாய் கிரகம் போல் மாறிய மொத்த நகரம்; பீதியில் மக்கள் - நாசா விளக்கம்!

செவ்வாய் கிரகம் போல் மாறிய மொத்த நகரம்; பீதியில் மக்கள் - நாசா விளக்கம்!

விளைவுகள் என்ன?

இந்தத் திட்டத்திற்கு ஆர்டெமிஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாசா விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள ஆராய்ச்சி அறிக்கை ஒன்றில், நிலவின் நேரம் பூமியை விட வேகமாக ஓடத் தொடங்கியுள்ளது. நிலவின் நேரம் ஒரு நாளைக்கு 57 மைக்ரோ விநாடிகள் வேகமாக ஓட தொடங்கியுள்ளது என தெரிவித்துள்ளது.

பூமியை விட நிலவின் நேரம் வேகமாக ஓடுகிறது...நாசாவின் பகீர் தகவல் - விளைவுகள் என்ன? | Moons Time Passes Faster Than Earth Reveals Nasa

ஆர்டெமிஸ் பயணத்திற்கு முன் சந்திரனின் நேரத்தை துல்லியமாகக் கணிக்க நாசா முடிவெடுத்துள்ளது. 52 ஆண்டுகளுக்கு முன் விண்வெளி வீரர்கள் கடைசியாக சந்திரனில் கால் பதித்தனர்.  அப்போதிருந்த நேரத்துடன் ஒப்பிடும்போது நிலவின் நேரம் 1.1 வினாடிகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சாதாரணமாக பார்க்கும்போது இது ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது. ஆனால், பூமி மற்றும் சந்திரனின் நேரம் சரியாக இருந்தால் தான் நேவிகேஷன் அமைப்புகள் போன்ற செயற்கைக்கோள்கள் துல்லியமாக செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.