நிலவில் வெடித்து சிதறப்போகும் சந்திரயான்-3 லேண்டர், ரோவர்? விஞ்ஞானிகள் பகீர் தகவல்!

India ISRO Chandrayaan-3
By Jiyath Oct 22, 2023 05:29 AM GMT
Report

நிலவில் உறக்க நிலையில் இருக்கும் சந்திரயான் 3, விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் வெடித்து சிதறும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சந்திரயான் 3

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ (ISRO) அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி சரித்திர சாதனை படைத்தது. பின்னர் விக்ரம் லேண்டரில் இருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் நிலவில் பல ஆய்வுகளையும் செய்து தகவல்களை கொடுத்தது.

நிலவில் வெடித்து சிதறப்போகும் சந்திரயான்-3 லேண்டர், ரோவர்? விஞ்ஞானிகள் பகீர் தகவல்! | Moon Chandrayaan 3 Lander Rover Likely To Explode

இதனையடுத்து நிலவின் தென் துருவத்தில் இரவு சூழல் வந்ததால் விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் உறக்க நிலையில் வைக்கப்பட்டது. பின்னர் இரண்டாம் பகல் வந்ததும் அதனை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர இஸ்ரோ திட்டமிடப்பட்டது. ஆனால் அதை மீண்டும் எழுப்ப முடியவில்லை என்றும் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரிடம் இருந்து எந்த சிக்னலும் கிடைக்கவில்லை என்றும் இஸ்ரோ தெரிவித்தது.

நிலவில் தரையிறங்கும் முன் நாமக்கல் கிராமங்களில் தரையிறங்கிய சந்திரயான் 3 - எப்படி தெரியுமா?

நிலவில் தரையிறங்கும் முன் நாமக்கல் கிராமங்களில் தரையிறங்கிய சந்திரயான் 3 - எப்படி தெரியுமா?

வெடித்து சிதறும் அபாயம்

இந்நிலையில் அதற்கு புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதாவது நிலவில் உள்ள சந்திரயான் 3 லேண்டர் மற்றும் ரோவர் விரைவில் வெடித்து சிதற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில் "நிலவுக்கு வளிமண்டலம் கிடையாது. இதனால் அதன் மேற்பரப்பில் ஏராளமான எரிகற்கள் வந்து விழும்.

நிலவில் வெடித்து சிதறப்போகும் சந்திரயான்-3 லேண்டர், ரோவர்? விஞ்ஞானிகள் பகீர் தகவல்! | Moon Chandrayaan 3 Lander Rover Likely To Explode

எனவே ஏதாவது ஒரு எரிகல் இந்த ரோவர் மற்றும் லேண்டர் மீது விழுந்தால் அது வெடித்து சிதறும். கடந்த காலங்களில் இதுபோன்ற சம்பவம் ஏற்கெனவே நடந்திருக்கிறது. அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலம் இந்த தாக்குதலை எதிர்கொண்டது" என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.