நிலவில் ரகசிய குகை; மனிதர்கள் வாழலாமாம்.. விஞ்ஞானிகள் தகவல்!

NASA
By Sumathi Jul 17, 2024 11:36 AM GMT
Report

நிலவில் ரகசிய குகை இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ரகசிய குகை 

நிலவில் நாசா ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இது தொடர்பாக, காந்த அலைகளின் தரவுகள் மற்றும் பூமியில் உள்ள எரிமலை குழாய்களை ஒப்பிட்டு NATURAL ASTRONOMY என்ற இதழில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

moon cave

அதில், நிலவின் மேற்பரப்பில் இருந்து சுமார் 100 மீட்டர் ஆழத்தில் குகை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அங்கு தங்கி ஆய்வு பணியில் ஈடுபட வாய்ப்புள்ளது.

மாறுவேடத்தில் ஏலியன்கள்..மனிதர்களுடன் வாழ்கின்றனர் - வெளியான திடுக்கிடும் தகவல்!

மாறுவேடத்தில் ஏலியன்கள்..மனிதர்களுடன் வாழ்கின்றனர் - வெளியான திடுக்கிடும் தகவல்!

விஞ்ஞானிகள் நம்பிக்கை

கடந்த 55 ஆண்டுகளுக்கு முன்பு நிலவில் நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் எட்வின் ஆல்ட்ரின் தரையிறங்கிய இடத்தில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் குகை இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலவில் ரகசிய குகை; மனிதர்கள் வாழலாமாம்.. விஞ்ஞானிகள் தகவல்! | Moon Cave Could Be Base For Future Astronauts

முன்னதாக, நிலவில் தங்கி ஆய்வு செய்வதற்கு, அதன் சுற்றுப்புறம், வெப்பம் உள்ளிட்டவை முக்கிய சவால்களாக பார்க்கப்பட்டது. தற்போது, நிலவில் கண்டறியப்பட்டுள்ள இந்த குகை மூலம்,

அங்கேயே தங்கி ஆய்வு செய்யும் சூழலை உருவாக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.