வெளிவரும் ரகசியங்கள்....நிலவில் ஏற்பட்ட நிலநடுக்கம்...கண்டறிந்த ரோவர்
நிலவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் சாதனம் கண்டுபிடித்துள்ளது.
விக்ரம் லேண்டர்
வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்பட்ட விக்ரம் லேண்டரின் பிரக்யான் ரோவர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு நிலவில் மேற்பரப்பில் இருக்கும் தனிமங்களை இந்த ரோவர் சாதனம் கண்டுபிடித்து அது தொடர்பான தகவல்களை அனுப்பியுள்ளது.அதில், ஆக்ஸிஜன், அலுமினியம், மாங்கனீசு, சல்பர் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதையும் ரோவர் கண்டறிந்ததுள்ளது.
தொடர்ந்து விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரின் செயல்பாடுகள் குறித்து இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தொடர்ந்து தகவல்களை தெரிவித்து வருகிறது. அவ்வப்போது இந்த சாதனங்கள் குறித்தான வீடியோவையும் இஸ்ரோ வெளியிட்டு வருகின்றது.
நிலவில் நிலஅதிர்வு
சமீபத்தில், விக்ரம் லேண்டர் நிலவில் நில அதிர்வு ஏற்பட்டதை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி நிலவில் தென் துருவத்தில் நில அதிர்வு ஏற்பட்டு உள்ளதாகவும் அதனை விக்ரம் லேண்டரில் உள்ள ILSA என்னும் கருவி பதிவு செய்துள்ளதாகவும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.