மூக்கைதுளைக்கும் மூன் கேக்.. ஆசையில் டச் செய்து கோடிக்கணக்கில் இழந்த மக்கள் - இப்படியும் நடக்குமா?
கேக்கிற்கு ஆசைப்பட்டு மக்கள் கோடிக்கணக்கில் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூன் கேக்
சீனர்கள் விரும்பி உண்ணும் ஒரு இனிப்பு உணவு வைகையான மூன் கேக் பண்டிகை காலங்களில் அதிகம் விற்பனையாகும். சிங்கப்பூரில் இந்த உணவு குறித்து பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் MoonCake விற்பனை விளம்பரங்கள் அதிகம் வந்துள்ளது.
அந்த பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் அந்த போலியான செய்திகளை கண்டு ஏமாந்தவர்களை, மோசடிக்கும்பல் ஒரு ஆண்ட்ராய்டு பேக்கேஜ் கிட்டை (APK) பதிவிறக்க செய்யவைக்கின்றனர்.
மோசடி
இந்நிலையில், அந்த கிட்டை பதிவிறக்கம் செய்தவர்கள் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து பணம் திருப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் போலீசார் தெரிவித்தனர். இந்த புதிய மோசடியால் மக்கள் குறைந்தபட்சம் S$325,000 (இந்திய மதிப்பில் சுமார் 18 கோடி) அளவிலான பணத்தை இழந்துள்ளதாக சிங்கப்பூர் போலீஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூரில் கடந்த மார்ச் மாதம் இதேபோல அறிய வகை துரியன் பழங்கள், செர்ரிகள் மற்றும் வாக்யு மாட்டிறைச்சி போன்ற பருவகால உணவுப் பொருட்களை ஆன்லைனில் வாங்க முயன்றபோது, குறைந்தது 168 பேர் 20,000 சிங்கப்பூர் டாலர்களை ஏமார்ந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan
