கல்யாணம் ஆகாதவர்களுக்கு இனி மாதந்தோறும் உதவித்தொகை - அரசு அதிரடி!
திருமணம் ஆகாதவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கிள்
ஹரியானா, கர்னல் மாவட்டத்தில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அதில் அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் பங்கேற்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அங்கு திருமணம் ஆகாத 60 வயது மதிப்புடைய ஆண் ஒருவர் பென்ஷன் குறித்து புகாரளித்தார்.
இதற்கு பதிலளித்த முதல்வர், அரியானாவில் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் மாதாந்திர ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி, அரசு 5 வயது முதல் 60 வயதுவரை திருமணம் ஆகாத நபர்களுக்கு விரைவில் உதவித் தொகை வழங்க திட்டமிட்டுள்ளது.
உதவித்தொகை
இதன்மூலம் 2 லட்சம் பேர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த திட்டம் குறித்து ஒரு மாதத்திற்குள் அரசு முடிவெடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், மூத்த குடிமக்கள், கைம்பெண்கள், மாற்று திறனாளிகள், மாற்று பாலினத்தவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அரசின் இந்த முடிவிற்கு மக்கள் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.