போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை - முதலமைச்சர் அறிவிப்பு!
போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு சாதனை ஊக்கத்தொகையை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஊக்கத்தொகை
தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பொங்கலையொட்டி சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை உள்ளிட்ட 8 போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றக் கூடிய ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகையை அறிவித்துள்ளார்.
இதில், 200 நாட்கள் மற்றும் அதற்குமேல் பணிபுரிந்த ஊழியர்களுக்கு தலா ரூ625 வழங்கப்படும் என்றும், 1,17,129 பணியாளர்களுக்கு மொத்தம் ரூ7.01 கோடி சாதனை ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
மேலும், 91 நாள் மற்றும் அதற்குமேல் ஆனால் 151 நாட்களுக்கு குறைவாக பணியாற்றியவர்களுக்கு ரூ195 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.