6 வயது சிறுமியை நோக்கி வந்த கொடூரன் - சரியான நேரத்தில் காபாற்றிய குரங்கு கூட்டம்!

Sexual harassment Uttar Pradesh India
By Swetha Sep 23, 2024 10:24 AM GMT
Report

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதில் இருந்து குரங்குகள் கூட்டம் காப்பாற்றியது நடந்துள்ளது.

கொடூரன் 

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத்தில் உள்ள தௌலா கிராமத்தில் கடந்த வாரம் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரின் முயற்சியை குரங்குகள் கூட்டம் சரியான நேரத்தில் வந்து தடுத்துள்ளது.

6 வயது சிறுமியை நோக்கி வந்த கொடூரன் - சரியான நேரத்தில் காபாற்றிய குரங்கு கூட்டம்! | Monkeys Attacked A Rapist And Saved 6 Yrs Old Girl

இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட குற்றவாளி இப்போது தப்பி ஓடிவிட்டார். அவரை கைது செய்ய போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது, சம்பவ இடத்திற்கு வந்த குரங்குகள் அவரை தாக்கியது. குரங்கின் தாக்குதலுக்கு பயந்து அவர் சிறுமியை விட்டுவிட்டு ஓடினார் என்று தெரிவித்தனர்.

பொதுவெளியில் பாலியல் வன்கொடுமை - வேடிக்கை பார்த்த மக்கள்!

பொதுவெளியில் பாலியல் வன்கொடுமை - வேடிக்கை பார்த்த மக்கள்!

குரங்கு கூட்டம்

மேலும், வேறு கிராமத்தை சேர்ந்த அந்த நபர் சிறுமி தனது வீட்டிற்கு வெளியே விளையாடுவதைக் கண்டதும், தன்னுடன் வரும்படி அவர் சிறுமியை வற்புறுத்தி அழைத்து சென்றுள்ளார். பழைய கட்டிடத்திற்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.

6 வயது சிறுமியை நோக்கி வந்த கொடூரன் - சரியான நேரத்தில் காபாற்றிய குரங்கு கூட்டம்! | Monkeys Attacked A Rapist And Saved 6 Yrs Old Girl

அந்த இடத்திற்கு கூட்டமாக வந்த குரங்குகள் குற்றவளியை தடுத்து தாக்குதல் நடத்தியது. இதனால் பயந்து அந்த நபர் சிறுமியை விட்டுவிட்டு ஓடி உள்ளார். இதையடுத்து சிறுமி தனது வீட்டிற்கு ஓடிச்சென்று பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறி உள்ளார்.

பதறிப்போன பெற்றோர்கள் உடனே போலீசாரிடம் புகார் அளித்தனர். அதுமட்டுமின்றி பாலியல் வன்கொடுமை செய்யும்போது சிறுமி எதிர்ப்பு தெரிவித்தால் சிறுமியின் குடும்பத்தினரை கொன்று விடுவதாக அந்த நபர் மிரட்டியதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், சம்பவத்தன்று கிராமத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் குற்றவாளி, சிறுமியை தன்னுடன் அழைத்துச் செல்வது பதிவாகியுள்ளது. அதன்மூலம், குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.