குமரியில் 4 பேருக்கு குரங்கம்மை அறிகுறி-தமிழகத்தில் தீவிரம்!

Tamil nadu Malaysia ‎Monkeypox virus Kanyakumari
By Sumathi Jul 29, 2022 07:26 AM GMT
Report

குரங்கு அம்மை நோய் அறிகுறியுடன் நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தந்தை, மகன், மகள் உட்பட நான்கு பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குரங்கம்மை

கொரோனாவை தொடர்ந்து உலக நாடுகளை குரங்கு அம்மை நோய் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கேரளாவைச் சேர்ந்த 3 பேருக்கும், டெல்லியைச் சேர்ந்த ஒருவருக்கும் குரங்கம்மை நோய் உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குமரியில் 4 பேருக்கு குரங்கம்மை அறிகுறி-தமிழகத்தில் தீவிரம்! | Monkeypox Symptoms 4 People In Kanyakumari

இந்நிலையில் குமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்த 4 பேருக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து காய்ச்சல் இருந்துள்ளது. மேலும் அவர்களுடைய உடலில் பல இடங்களில் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படுவதைப்போன்ற தடிப்புகளும் இருந்ததாக கூறப்படுகிறது.

4 பேருக்கு அறிகுறி

இதனால் 4 பேரும் சந்தேகத்தின் பேரில் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தனர். பரிசோதித்த டாக்டர்கள், 4 பேருக்கும் குரங்கம்மை நோய் அறிகுறிகள் இருப்பதால் அவர்களை தனி வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

குமரியில் 4 பேருக்கு குரங்கம்மை அறிகுறி-தமிழகத்தில் தீவிரம்! | Monkeypox Symptoms 4 People In Kanyakumari

மேலும் 4 பேருடைய ரத்த மாதிரிகளும் புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள்.

புனேவில் ஆய்வு

குரங்கு அம்மை நோய் ஏற்படுவதற்கு வெளித் தொடர்பு எதுவும் அவர்களுக்கு இல்லாத நிலையில் இதற்கான அறிகுறி குறித்தும் மருத்துவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

புனேவுக்கு சென்றுள்ள இவர்களது மாதிரிகள் பரிசோதனை முடிந்து வந்தால்தான் அவர்களுக்கு நோய் பாதிப்பு உள்ளதா என்பது உறுதி செய்யப்படும் என்றும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.