குரங்கம்மை பாதிப்பில் 98% நபர்கள் ஓரினசேர்க்கையாளர்கள்...ஆய்வு கூறும் அதிர்ச்சி தகவல் - ஏன்?

World Health Organization Virus Monkeypox
By Sumathi Jul 25, 2022 07:28 AM GMT
Report

 95 சதவீத குரங்கம்மை பரவலுக்கு பாலியல் நெருக்கங்களே காரணம் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

குரங்கம்மை

லண்டனில் உள்ள குயின் மேரி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், கடந்த ஏப்ரல் 27 முதல் ஜூன் 24 வரை பாதிக்கப்பட்ட 528 நபர்கள வைத்து நடத்திய ஆய்வில், நெருக்கமாக இருப்பவர்களின் மூச்சுக்காற்று மூலமும், ஆடைகள் மூலமும் எளிதாக குரங்கம்மை பரவலாம் என தெரியவந்துள்ளது.

குரங்கம்மை பாதிப்பில் 98% நபர்கள் ஓரினசேர்க்கையாளர்கள்...ஆய்வு கூறும் அதிர்ச்சி தகவல் - ஏன்? | Monkeypox Spread Through Sexual Activity

மேலும் 95 சதவீத குரங்கம்மை பரவலுக்கு பாலியல் நெருக்கங்களே காரணம் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.தொற்று பாதித்தவர்களில் 98 சதவீத நபர்கள் ஓரினசேக்கையாளர்கள் அல்லது இருபாலின ஆண்கள் எனவும், 75 சதவீத நபர்கள் வெள்ளையர்கள் எனவும்

 பாலியல் நெருக்கம்

41 சதவீதம் பேருக்கு மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ் தொற்று இருந்ததும் தெரியவந்துள்ளது. இவர்களில் அரிப்புடன் 62 சதவீதத்தினருக்கு காய்ச்சலும், 41 சதவீததினருக்கு சோர்வும், 31 சதவீத்தினருக்கு உடல்வலியும்,

குரங்கம்மை பாதிப்பில் 98% நபர்கள் ஓரினசேர்க்கையாளர்கள்...ஆய்வு கூறும் அதிர்ச்சி தகவல் - ஏன்? | Monkeypox Spread Through Sexual Activity

27 சதவீதத்தினருக்கு தலைவலியும் 56 சதவீதத்தினருக்கு நிணநீர் அழற்சியும் இருப்பது கண்டறியப்பட்டது.பரிசோதிக்கப்பட்ட 377 நபர்களில், 109 பேருக்கு தொற்று பாலியல் ரீதியாக பரவியுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

விந்தணுக்களில்...

மேலும் 32 நபர்களை சோதித்ததில், 29 பேருக்கு விந்தணுக்களில் குரங்கம்மை டி.என்.ஏ இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் இதுவரை குரங்கம்மையில் அறியப்படாத புதிய பாதிப்புகளும் உள்ளதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

சைபில்ஸ் (Syphilis), ஹேர்ப்ஸ் (Herps), போன்ற பாலியல் ரீதியாக பரவும் நோய்தொற்றுக்களின் அறிகுறிகளை போலவே குரங்கம்மைக்கும் அறிகுறிகள் இருக்கும் எனவும், வாய் அல்லது ஆசனவாய் பகுதியில் புண்கள் வருவதும் இதன் அறிகுறிகள் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

மேலும் இந்த தொற்று தவறாக கண்டறியப்படலாம் எனவும், பலர் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு காரணமாகவே மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வந்ததாகவும், சுகாதார மருத்துவர்களுக்கு இந்த தொற்றை பற்றி கற்பிக்க வேண்டும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.

இந்த தொற்றை கண்டறியாவிட்டால், இதை குணப்படுத்துவது கடினம் எனவும் கூறினர்.