என் தலைமுடியைக் கூட தொட முடியாது - விளாசிய மஹூவா மொய்த்ரா!
தன் மீதான் குற்றச்சாட்டை எம்.பி., மஹுவா மொய்த்ரா மறுத்துள்ளார்.
மஹுவா மொய்த்ரா
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா. நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்காகப் பிரபல தொழிலதிபரிடம் மஹுவா மொய்த்ரா பணம் வாங்கியதாக கடந்த வாரம் பாஜக தனது குற்றச்சாட்டை முன்வைத்தது.
இது தொடர்பாக மஹுவா மொய்த்ராவை விசாரிக்க விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே கடிதம் எழுதியுள்ளார்.
விசாரணைக்குழு
இதில் நடவடிக்கை எடுத்த நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு மஹுவா மொய்த்ராவுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், என்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற விரும்புவோரால் தனது தலைமுடியைக்கூடத் தொட முடியாது என எம்.பி., மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.