மணிப்பூர் கலவரம்.. முழுவதும் திட்டமிட்ட சதி, தூண்டிவிட்டது அமைச்சரா? - ஆர்.எஸ்.எஸ் தலைவர் பேச்சு!
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மணிப்பூர் கலவரம் குறித்து பேசியுள்ளார்.
கலவரம்
மணிப்பூரில், குக்கி மற்றும் மைதேயி இன மக்களுக்கு இடையிலான வன்முறை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதில் பலர் உயிரிழந்தனர், பின்னர் பெண்களுக்கு அவர்கள் செய்தது நாட்டையே உலுக்கியது. மேலும், கடந்த வாரம் வெளியான கூட்டுப் பாலியல் கொடுமை தொடர்பான காணொளி, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில்,
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மணிப்பூர் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ் தொடங்கப்பட்டதன் ஆண்டு விழா நாக்பூரில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளரும், பாடகருமான சங்கர் மகாதேவன் கலந்துகொண்டார்.
ஆர்.எஸ்.எஸ் தலைவர்
இந்நிலையில், அந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் பேசினார். அதில், "மணிப்பூர் ஒரு எல்லைப்புற மாநிலம். மணிப்பூர் வன்முறையில் எல்லை தாண்டிய தீவிரவாதிகள் ஈடுபட்டிருக்கின்றனர். மைதேயி - குக்கி சமூக மக்கள் அங்கு நீண்டகாலம் ஒன்றாகத்தான் வாழ்ந்துவந்தனர். திடீரென அங்கு எப்படிக் கலவம் மூண்டது, இதைத் திட்டமிட்ட சதியாகவே கருத முடிகிறது.
இந்த மோதல்களால் வெளிநாட்டு சக்திகளுக்கு நன்மை உண்டாகும். இதில் ஏதாவது வெளிநாட்டு சதிகள் இருக்கின்றனவா. தற்போது ஏற்பட்டிருக்கும் பிரிவினைவாதத்தினாலும் உள் முரண்பாடுகளினாலும் யாருக்கு நன்மை. இந்த முரண்பாடுகள் அனைத்தும் வெளி சக்திகளுக்குத்தான் பலன் தரும்.
அங்கு நடந்த சம்பவத்தில் வெளியிலிருந்து வந்தவர்கள் ஈடுபட்டார்களா? மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மணிப்பூரில் மூன்று நாள்கள் இருந்தார். உண்மையில் மோதலைத் தூண்டியது யார்? வன்முறை அங்கு நடக்கவில்லை, நடத்திவைக்கப்படுகிறது" என்று பேசியுள்ளார்.