மணிப்பூரில் நிகழ்ந்த மற்றொரு பயங்கரம் - பழங்குடியின இளைஞரின் தலையை துண்டித்து தொங்கவிட்ட கொடூரம்!
மணிப்பூரில் பழங்குடி இன இளைஞரின் தலையை துண்டித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கலவரம்
மணிப்பூரில் சில மாதங்களாகவே பழங்குடியின மக்களுக்கும் மேல்தட்டு மக்களுக்கும் இடையே கலவரம் வெடித்து வந்தது. தற்பொழுது பழங்குடியினத்தை சேர்ந்த இரு பெண்களை ஏராளமான ஆண்கள் நிர்வணமாக்கி, அந்தரங்க உறுப்புகளில் கைவைத்து இழுத்து செல்லும் காணொலி இணையத்தில் வைரலானது.
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர், இதில் முக்கிய குற்றவாளி ஹேராதாஸ் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இதில் தொடர்புடைய நபர்களை தீவிரமாக தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிர்ச்சி தகவல்
இந்நிலையில், நாடு முழுவதும் இந்த சம்பவத்திற்கு அவசர நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் சலசலப்பு ஓய்வதற்குள் மற்றொரு அதிர்ச்சி வீடியொ வெளியாகியுள்ளது.
அதில் பிஷ்னுபூர் மாவட்டத்தில் குக்கி சமூகத்தை சேர்ந்த டேவிட் எனும் இளைஞரின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது, அதனை அவரது வீடு வாசலில் தடுப்பிற்காக உள்ள மூங்கில் கட்டையின் மீது தொங்கவிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் கடந்த 2ம் தேதி நள்ளிரவு 12 மணி அளவில் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், இந்த சம்பவம் தங்கள் மக்கள் மீது எம்மாதிரியான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன என்பதை தெளிவுபடுத்துவதாக குக்கி மக்கள் கூறியுள்ளனர்.