பயிற்சியாளர் கம்பீரா? அணியில் எல்லாமே மாறிடும்!! முகமது ஷமி பரபரப்பு கருத்து
இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தான் தேர்வாகுவார் என்ற தகவல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருக்கின்றன.
கவுதம் கம்பீர்
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரரும், 2011-ஆம் ஆண்டில் உலகக்கோப்பையை வெல்ல முக்கிய வீரராக இருந்த கவுதம் கம்பீர் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளார் என்று தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.
ஆனால், இன்னும் அது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. கொல்கத்தா அணிக்கு மெண்டராக திரும்பியவர், 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அக்கட்சிக்கு கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.
எல்லாமே மாறும்
பலரும் கவுதம் கம்பீர் குறித்து பலவிதமாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்திய அணியை சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவர் பேசும் போது, அவரது பயிற்சி முறை நேரடியானது மற்றும் இளம் வீரர்களுக்கு உதவும் ஒழுக்கத்தை செயல்படுத்துகிறது.
இளைஞர்களுக்கு திறமை, மனோபாவம் மற்றும் அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது என்பதையும் அவர் கற்றுக்கொடுக்கிறார். இது இந்திய அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு பயனளிக்கும்” என்றார்.