மகளின் பாஸ்போர்ட்டில் கையெழுத்திட மறுத்த முகமது ஷமி - விளாசிய முன்னாள் மனைவி
முகமது ஷமி குறித்து பல குற்றச்சாட்டுகளை அவரது முன்னாள் மனைவி வைத்துள்ளார்.
முகமது ஷமி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் முகமது ஷமி. இவரது மனைவி ஹாசின் ஜகான். தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் அவருக்குப் பல பெண்களோடு தொடர்பு இருப்பதாகவும் கூறி ஷமியிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.
இவர்களின் மகள் ஹாசினோடு வாழ்ந்து வருகிறார். ஷமி, சமீபத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது மகளை சந்தித்ததாகவும், அவருக்கு விருப்பமான பொருட்களை வாங்கிக் கொடுத்ததாகவும் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார்.
மனைவி குற்றச்சாட்டு
இந்நிலையில், அந்த வீடியோ குறித்து ஹாசின் பல விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதில், “ஷமி என் மகளின் பாஸ்போர்ட் காலாவதி ஆகிவிட்டதை அடுத்து அதில் கையெழுத்திடவே மகளை சந்தித்தார். ஆனால் கையெழுத்து போடாமல் அவரை ஷாப்பிங் அழைத்துச் சென்றுள்ளார்.
அவர் விளம்பர தூதராக இருக்கும் நிறுவனத்தின் கடைக்கு அழைத்துச் சென்று பொருட்களை வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால் அந்நிறுவனத்தில் அவர் எந்த பொருட்கள் வாங்கினாலும் அதற்கு பணம் பெற மாட்டார்கள்.
இலவசப் பொருட்களையே அவர் தன் மகளுக்கு வாங்கிக் கொடுத்துள்ளார். என் மகள் கிடாரும் கேமராவும் வேண்டும் என விரும்பினாள். ஆனால் அவர் அதை வாங்கித் தரவேயில்லை” எனத் தெரிவித்துள்ளார்.