என்ன வேணா சொல்லுங்க..விராட் கோலி இந்த விஷயத்தில் செல்பிஷ் தான் - பாகிஸ்தான் வீரர்!!
விராட் கோலி
இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி உலகளவில் பல விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் என பலரையும் தனது அபாரமான ஆட்டத்தால் கவர்ந்துள்ளார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அவர் மீது நிறைய விமர்சனங்களும் உள்ளது. அப்படி தான், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் அவரை முன்னர் விமர்சித்திருந்தார்.
மைக்கேல் வாகன் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் போன்றோர் கலந்து கொண்ட podcast ஒன்றில் பேசுகையில், நீங்கள் முழு சூழலையும் பார்த்தால், என்னைப் பொறுத்தவரை, யார் விளையாடினாலும், உங்கள் எண்ணம் எப்போதும் விளையாட்டில் வெற்றி பெற வேண்டும். உங்கள் நோக்கம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். அணிக்கு மதிப்பு சேர்க்கக்கூடிய சிறந்த வழி எதுவாக இருந்தாலும் அதைச் செய்ய வேண்டும் என்றார்.
செல்பிஷ் தான்
90 ரன்களில் யாராவது பெரிய ஷாட்களை விளையாடுவதைத் தடுத்து நிறுத்தினால், நான் அதை ஒருபோதும் எடுக்க மாட்டேன். 95 ரன்னிற்கு பிறகு, ஒருவர் சதம் அடிக்க ஐந்து பந்துகள் எடுத்தால், சதம் அடித்த பிறகு அவரது எண்ணம் மாறினால்... 95 அல்லது 92 ரன்களில் இருந்தபோது ஏன் அவரால் அதே ஷாட்டை ஆட முடியவில்லை?
ஏனெனில் என்னைப் பொறுத்தவரை, உங்கள் அணிக்கு அந்த மதிப்பைச் சேர்க்க சிறந்த வழியைச் செய்ய உங்கள் நோக்கம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். அந்த ஆட்டத்தில், விராட் தனது சதத்தை எட்டுவதற்கு நிறைய பந்துகளை எடுத்தார், மேலும் அவர் பெரிய ஷாட்களை விளையாடவில்லை என்று உணர்ந்தேன்.
அவரது நூறு ரன்களை மீண்டும் ஒருமுறை நீங்கள் கடந்து சென்றால், நான் என்ன சொல்கிறேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். என்னைப் பொறுத்தவரை, தனிப்பட்ட மைல்கற்கள் கிரிக்கெட்டில் இருந்து விலகிச் செல்ல வேண்டும். உங்கள் 50, 100 அல்லது 5 விக்கெட்டுகளை நாங்கள் பார்க்க விரும்பவில்லை, அது வெற்றிக்கான காரணத்திற்காக இல்லையென்றால், கிரிக்கெட் விளையாட்டில், ஒரு ரன் கூட முக்கியமானது என்று தெரிவித்திருந்தார் ஹபீஸ்.
Hafeez ?️⤵️
— M (@anngrypakiistan) June 20, 2024
'Virat Kohli a selfish player he slowed down nearing his 100 took a lot of balls & stopped his shots.'
- @MHafeez22 | @imVkohli pic.twitter.com/JFWn55uMzr
முன்னதாக, கடந்த 2023-ஆம் ஆண்டு உலகக்கோப்பை ஒருநாள் தொடரின் போது, விராட் கோலி தென்னாபிரிக்கா அணிக்கு எதிரனாக போட்டியை வைத்து அப்போதே ஹபிஸ் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.