என்னடா இது - மேட்ச் ஜெயிச்சும் கேப்டன் ரோகித் சர்மாவின் படுமோசமான சாதனை!!

Rohit Sharma Indian Cricket Team T20 World Cup 2024
By Karthick Jun 21, 2024 06:35 AM GMT
Report

நேற்று நடைபெற்ற ஆப்கனிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அணி ஆப்கனிஸ்தானை 47 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

இந்தியா வெற்றி

சூப்பர் 8 சுற்றில் முதல் போட்டியாக இந்திய அணி ஆப்கனிஸ்தானை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணியில் கேப்டன் ரோகித் 8(13), விராட் 24(24) என ரிஷப் பண்ட் 20(11) என 62 ரன்கள் சேர்பதற்குள் வெளியேறினார்.

Suryakumar Yadav batting against Afghanistan

அதன் பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் நேர்த்தியாக விளையாடினார். 53(28) ரன்களை எடுத்து அவர் அவுட்டாக, ஹர்திக் பாண்டியா 32(24) ரன்களை சேர்த்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 181/8 ரன்களை குவித்தது.

Jasprit Bumrah against Afghanistan

பின்னர் களமிறங்கிய ஆப்கனிஸ்தான் அணி வீரர்களுக்கு கடும் நெருக்கடிகளை கொடுத்து வெளியேற்றினர் இந்திய பௌலர்கள்.அதிகபட்சமாக அந்த அணியில் அஸ்மத்துல்லா உமர்சாய் 26 (20) எடுத்தார்.

சஞ்சு சாம்சனுக்கு இடமில்லை - கெடுத்து விட்டதே இவர் தான்!! முன்னாள் வீரர் ஆதங்கம்

சஞ்சு சாம்சனுக்கு இடமில்லை - கெடுத்து விட்டதே இவர் தான்!! முன்னாள் வீரர் ஆதங்கம்

மோசமான சாதனை

இந்திய அணி தரப்பில் அர்ஷிதீப் சிங், பும்ரா தலா 3 விக்கெட் வீழ்த்தினார். 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையிலும், கேப்டன் ரோகித் சர்மா மோசமான சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

Rohit indian team sad

ஐசிசி தொடர்களில் ரோகித் சர்மா இதுவரை 19 முறை ஒற்றை இலக்க ரன்களில் தனது விக்கெட்டை இழந்திருக்கிறார். இந்த மோசமான சாதனையில் அடுத்த இடத்தில் யுவராஜ் சிங்(17), விராட் கோலி (14) முறை இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.