மோடியோட அந்த முடிவு...!! அதனால் தான் இந்தியா WC'ல ஜெயிச்சிட்டு இருக்கு!! மேற்குவங்க ஆளுநர்!!
இந்திய அணி இந்த உலகக்கோப்பை போட்டியில் பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது.
இந்திய அணியின் தொடர் வெற்றி
நடைபெற்று வரும் உலககோப்பை தொடரில் இந்திய அணி தொடர்ந்து 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் கடைசியாக நடைபெற்ற தென் ஆப்ரிக்காவிற்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இதுவரை ஆஸ்திரேலியா, ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், நியூசிலாந்து, இங்கிலாந்து, ஸ்ரீலங்கா, தென்னாபிரிக்கா என தொடர் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முதல் அணியாக முன்னேறியுள்ளது.
மேற்குவங்க ஆளுநர் கருத்து
இந்நிலையில் தான், இந்திய அணியின் வெற்றி குறித்து மேற்குவங்க கவர்னர் சிவி ஆனந்த போஸ் கூறிய கருத்துக்கள் பெரும் வைரலாகி வருகின்றது. அவர் இது குறித்து பேசும் போது, நரேந்திர மோடி ஜியின் ஆத்மநிர்பர் பாரத் (தன்னம்பிக்கை இந்தியா) என்ற கருத்து விளையாட்டு உட்பட அனைத்து துறைகளிலும் பரவி வருகிறது.
இந்தியா ஆத்மநிர்பர் என்பதை உலகம் முழுவதும் நிரூபித்துள்ளோம். இது இந்திய மக்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றி" ' என அவர் கூறினார்.
இவரின் இந்த கருத்து தற்போது சமூகவலைதங்களில் வெளியான நிலையில் விமர்சிக்கப்பட்டு வருகின்றது. இதில் உங்கள் கருத்து என்ன என்றும் பலரும் விவாதங்களை துவங்கி இருக்கின்றனர்.