உலகத்திலேயே பிரதமர் மோடி தான் முதலிடம் - என்ன சாதனை தெரியுமா?

Narendra Modi X
By Karthikraja Jul 15, 2024 05:51 AM GMT
Report

சமூக வலைத்தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி புதிய சாதனை படைத்துள்ளார்.

நரேந்திர மோடி

தற்காலத்தில் சமூக வலைத்தளங்களில் கணக்கு இல்லாதவர்கள் எண்னிக்கை அரிதிலும் அரிது. அந்த அளவுக்கு சமூக வலைத்தளம் மக்களிடையே ஆதிக்கம் செலுத்துகிறது. சமூகவலைத்தளத்தில் ஒரு கருத்தை பதிவிட்டால் உடனடியாக லட்சக்கணக்கான மக்களை சென்றடையும். 

modi using twitter x 100 million followers

இதனால் அனைத்து துறை சார் பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்கியுள்ளனர். குறிப்பாக உள்ளூர் அரசியல்வாதி முதல் உலக அரசியல் தலைவர்கள் வரை இதன் மூலம் தேர்தல் பிரச்சாரமே செய்கின்றனர். 

ஒரே ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்; பல சாதனைகளை படைத்த விராட்கோலி - என்ன தெரியுமா?

ஒரே ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்; பல சாதனைகளை படைத்த விராட்கோலி - என்ன தெரியுமா?

எக்ஸ்

அந்தவகையில் பிரதமர் நரேந்திர மோடி குஜராத் ,மாநில முதல்வராக இருந்த போதே எக்ஸ் தளத்தில் கணக்கு தொடங்கி தனது கருத்துக்களை பதிவிடுவது, தனது அரசின் திட்டங்கள் குறித்து பதிவிடுவது என ஆக்டிவ் ஆக செயல்பட்டு வருகிறார். 2009 ம் ஆண்டு முதல் எக்ஸ் தளத்தில் இயங்கும் பிரதமர் நரேந்திர மோடியை தற்போது 10 கோடி பேர் பின்தொடர்கிறார்கள்.  

இது அமெரிக்கா அதிபர் ஜோ பிடெனை விட அதிகம். அவரை 3 கோடி பேர் பின்பற்றுகிறார்கள். துபாய் ஆட்சியாளர் ஷேக் முகம்மதுவை 1.2 கோடி பேரும், போப் பிரானிஸ்சை 1.85 கோடி பேரும் பின்பறுகிறார்கள். உலக அளவில் அதிக பேர் பின்பற்றும் அரசியல் தலைவர் என்ற சாதனையை பிரதமர் மோடி படைத்துள்ளார்.  

 

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “எக்ஸ் தளத்தில் 10 கோடி பேர் பின்தொடர்கின்றனர். இந்த தளத்தில் விவாதம், கருத்துகள், மக்களின் ஆசீர்வாதங்கள், ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இவை வருங்காலத்திலும் தொடரும்’’ என தெரிவித்துள்ளார்.

ராகுல்காந்தி

இந்தியா அளவில் பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியை 2.64 கோடி பேரும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை 2.75 கோடி பேரும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை 1.9கோடி பேரும் பின் தொடர்கிறார்கள்.

மேலும், விராட் கோலி(9.41 கோடி) , அமிதாப் பச்சன்(4.8கோடி) ஆகியோர் மோடியை விட குறைவான பின்தொடர்பவர்களையே கொண்டுள்ளனர்.