அயர்லாந்தின் இளம்வயது பிரதமர்; சைமன் ஹாரிஸ்க்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!
அயர்லாந்தின் புதிய பிரதமராக பதவியேற்ற 37 வயதான சைமன் ஹாரிஸுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இளம் வயது பிரதமர்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லியோ வரத்கர் அயர்லாந்து பிரதமர் பதவியில் இருந்து திடீரென விலகியதால் 'ஃபைன் கேல்' கட்சியின் புதிய தலைவராக சைமன் ஹாரிஸ் பிரதமாக தேர்வானார். புதிய பிரதமரை தேர்வு செய்ய அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் அவர் 88 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார்.
இதை தொடர்ந்து சைமன் ஹாரிஸ் அந்நாட்டின் அதிபர் மாளிகையில் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், 37 வயதில் பிரதமர் பதவியேற்றுள்ள சைமன் ஹாரிஸுக்கு இந்திய பிரதமரான நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மோடி வாழ்த்து
அதில், “சைமன் ஹாரிஸ் அயர்லாந்தின் மிக இளம் வயது பிரதமராக தேவர்வாகி உள்ளதற்கு வாழ்த்துகள். ஜனநாயக விழுமியங்களின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட நமது வரலாற்று உறவுகள் உயர்ந்த மதிப்புக்குரியது. இந்தியா - அயர்லாந்து இருதரப்பு கூட்டுறவை மேலும் வலுப்படுத்த இணைந்து செயல்படுவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
சைமன் ஹாரிஸ் அவரது 20 வயதிலே படிப்பை பாதியில் விட்டு அரசியலுக்குள் நுழைந்தார். அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு 24 வயதில் தேர்வானார்.இதையடுத்து, வர் முன்னாள் சுகாதார மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்தவர். கொரோனா பேரிடர் காலத்தில் திறம்பட செயலாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.