இங்க வந்தீங்கண்ணா கோடி கணக்கில் கொட்டித் தருகிறோம் - அழைக்கும் பிரபல நாடு!
எங்கள் நாட்டுக்கு குடிவந்தால் கோடிக்கணக்கில் பணம் தருகிறோம் என நாடொன்று அறிவித்துள்ளது.
அயர்லாந்து
ஐரோப்பிய நாடுகளில் ஒன்று அயர்லாந்து. குடி வந்தால், இங்கு குடிவந்தால் இந்திய பணமதிப்பின்படி 75 லட்சம் (92000 USD) வரை மானியம் தருவதாக அந்நாட்டு அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன் கீழ் விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் ஜூலை-1 முதல் தங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம். இங்கு காலியாக உள்ள அல்லது பழுதடைந்த வீடுகளை புதுப்பிக்க விரும்புவோருக்கு $92,000 வரையிலான மானியங்கள் வழங்கப்படும்.
மானியம்
இந்த தீவுகளில் மக்கள் தொகையை அதிகரிக்கும் முயற்சிகளில் மேற்குக் கடற்பரப்பில் அமைந்துள்ள 20-க்கும் மேற்பட்ட அழகிய தீவுகளுக்கு புத்துயிர் அளிக்கும் விதமாக இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு சொத்துக்களை யார் வாங்கலாம் என்பதில் எந்த தடையும் இல்லை. ஆனால், ஒரு இடத்தை வைத்திருப்பது அங்கு வாழ்வதற்கான உரிமையை அளிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.