மருத்துவமனை பேட்டில் முகமது ஷமி - பிரதமர் மோடி கொடுத்த உற்சாகம்

Cricket Narendra Modi Indian Cricket Team Mohammed Shami
By Karthick Feb 28, 2024 03:27 AM GMT
Report

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு, கால் பாதத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது

ஷமி

இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்பவர் முகமது ஷமி. டெஸ்ட், ஒரு நாள், டி20 என அனைத்து வகை போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர், தற்போது கால் பாதத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.

modi-wishes-fast-recovery-for-mohammed-shami

இது குறித்து மருத்துவமனையில் இருந்து அவர் பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார். லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷமிக்கு "அக்கீலீஸ் டெண்டன்" என்றழைக்கப்படும் கால் பாத பிரச்சனைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சோகத்துல இருந்தோம்..ஆனா மோடி..! ஷமி பகிர்நதக்கொண்ட தகவல்..!

சோகத்துல இருந்தோம்..ஆனா மோடி..! ஷமி பகிர்நதக்கொண்ட தகவல்..!

மோடி வாழ்த்து

2023 உலககோப்பைக்கு பிறகு இந்திய அணியில் இருந்து, விலகி இருந்து தொடர்நது சிகிச்சைகளை மேற்கொண்டு வரும் ஷமிக்கு இந்திய பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

modi-wishes-fast-recovery-for-mohammed-shami 

பிரதமர் பகிர்ந்துள்ள வாழ்த்துச் செய்தியில், நீங்கள் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன், முகமது ஷமி! உங்களுக்கு மிகவும் தேவையான தைரியத்துடன் இந்த காயத்தை நீங்கள் சமாளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.