‛இந்தியா’ கூட்டணியில் பிரதமராக யாருக்கு தகுதி? ஆனாலும் மோடியை.. சர்வே ரிசல்ட்!

M K Stalin Rahul Gandhi Narendra Modi India
By Sumathi Feb 04, 2024 07:19 AM GMT
Report

நாட்டின் அடுத்த பிரதமர் குறித்த சர்வே ரிசல்ட் வெளியாகியுள்ளது.

அடுத்த பிரதமர்? 

டைம்ஸ்நவ் -இடிஜி சார்பில் பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் யார்? அடுத்த பிரதமராக யார் வேண்டும்? என்பது குறித்து சர்வே மேற்கொள்ளப்பட்டது. அதில், பிரதமர் மோடி முன்னிலையில் உள்ளார். 2வது இடத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்ளார்.

rahul vs modi

இருப்பினும் இருவருக்கும் இடையேயான வித்தியாசம் என்பது அதிகளவில் உள்ளது. மோடியே பிரதமராக வரவேண்டும் என 64 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மாறாக ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று 17 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி திடீர் சென்னை வருகை; என்ன காரணம் - பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்!

பிரதமர் மோடி திடீர் சென்னை வருகை; என்ன காரணம் - பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்!

‛இந்தியா' கூட்டணி

இந்நிலையில் தான் ‛இந்தியா' கூட்டணியில் இருந்து பிரதமர் வேட்பாளராக யார் வர வேண்டும் என்பது குறித்த ரிசல்ட்டும் வெளியிடப்பட்டுள்ளது. ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்று 19 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

rahul vs stalin

இதற்கு அடுத்த இடத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளார். அவருக்கு 15 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 3வது இடத்தில் கெஜ்ரிவால் இருக்கிறார். இந்த வரிசையில் தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் 5வது இடத்தில் உள்ளார். ஸ்டாலின் முதல்வராக வர வேண்டும் என்று 6 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.