3 நாள் தியானம் - பிரதமர் மோடியின் தமிழக விசிட்..முழு பயணம் அட்டவணை
நாட்டின் பிரதமர் மோடி இன்று மாலை தமிழகம் வருகிறார்.
மோடி - தமிழகம்
நாட்டின் பிரதமர் மோடி, இந்த ஆண்டின் முதல் பயணமாக தமிழகம் வந்து சென்றார். அதனை தொடர்ந்து, அயோத்தி ராமர் கோவில் குடமுழுகிற்கு முன்பாக ஒரு முறை, கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளின் துவக்கத்தின் போது ஒரு முறை, தேர்தல் பிரச்சாரங்கள், பாஜக கூட்டங்கள் என கடந்த 5 மாதங்களில் அடுத்தடுத்து தமிழகம் வந்து சென்றார்.
நாட்டின் மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், முடிவுகள் வெளியாக இன்னும் ஒரு வார இடைவேளை கூட இல்லை. இந்நிலையில், தான் 3 நாள் பயணமாக மீண்டும் இன்று தமிழகம் வருகிறார் மோடி.
அட்டவணை
கன்னியகுமரியல் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் அவர் தியானம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து மாலை 4:30 மணியளவில் கன்னியாகுமரி வந்தடையும் அவர், பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்கிறார்.
அதனை முடித்து கொண்டு நேராக விவேகானந்தர் மண்டபம் செல்லும் அவர், தொடர்ந்து 3 நாட்களை தியானம் மேற்கொள்ளவுள்ளார். அதனை முடித்து பிறகு, நேராக இங்கிருந்து டெல்லி பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி.