முடிவடையும் தேர்தல் - 3 நாள் பயணம் !!தியானம் செய்ய தமிழகம் வரும் பிரதமர் மோடி !!
நாட்டின் பிரதமர் மோடி 3 நாள் பயணமாக தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் பிரச்சாரங்கள் நாடு முழுவதுமாக தீவிரமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார் பிரதமர் மோடி. 7 கட்ட தேர்தலில் இன்னும் ஒரு கட்ட தேர்தலே மீதம் இருக்கும் நிலையில், கடைசி கட்ட தேர்தல் பிரச்சாரங்கள் மும்முரப்படுத்தப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து அடுத்து நான்கு நாட்களில் தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளதால், அடுத்த ஓரிரு வாரங்களுக்கு நாட்டின் அரசியல் களம் மிக தீவிரமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை
2024-ஆம் ஆண்டின் முதல் பயணமாக தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடி, அதனை தொடர்ந்து அடுத்தடுத்து பல முறைகள் தமிழகம் வந்து சென்றுள்ளார். கட்சி கூட்டம், அரசு நிகழ்ச்சிகள், தேர்தல் பிரச்சாரம் என வந்து சென்றவர், தற்போது மீண்டும் தமிழகம் வரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இம்மாதம் அதாவது மே 30-ஆம் தேதி கன்னியாகுமரிக்கு அவர் வருகை தரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
மே மாதம் 31 மற்றும் கடைசி கட்ட தேர்தல் நடைபெறும் நாளான ஜூன் 1 ஆம் தேதிகளில் கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய உள்ளார்.
தனது தியானத்தை முடித்து கொண்டு, அன்றைய தினம் பிற்பகலிலே அவர் மீண்டும் டெல்லி புறப்படுவார் என்றும் தெரிவிக்கப்டுகிறது.