ராமர் கோவிலுக்கு 'பாபர் பூட்டு'.. மோடியின் கூற்று முற்றிலும் பொய் - பிரியங்கா காந்தி பதிலடி!

Indian National Congress Narendra Modi India Priyanka Gandhi Lok Sabha Election 2024
By Jiyath May 09, 2024 02:06 PM GMT
Report

ராமர் கோவிலுக்கு 'பாபர் பூட்டு' போடுவோம் என்ற பிரதமர் மோடியின் கூற்று முற்றிலும் பொய் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி

மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி "காங்கிரஸ் கட்சி காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ திரும்ப கொண்டு வருவதை தடுக்கவும், அயோத்தியில் 'பாபர் பூட்டு' போடுவதை தடுக்கவும்,

ராமர் கோவிலுக்கு

மக்களவை தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெறுவது அவசியம்" என்று பேசியிருந்தார். இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றார். அப்போது பேசிய அவர் "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலுக்கு 'பாபர் பூட்டு' போடுவோம் என்ற பிரதமர் மோடியின் கூற்று முற்றிலும் பொய்.

இதுக்காக பெருமைப்படணும்.. இந்தியா வேகமா வளர்ந்துருக்கு - மோடி ஆட்சியை புகழ்ந்த ராஷ்மிகா!

இதுக்காக பெருமைப்படணும்.. இந்தியா வேகமா வளர்ந்துருக்கு - மோடி ஆட்சியை புகழ்ந்த ராஷ்மிகா!

இடம்பெறவில்லை

நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்போம் என காங்கிரஸ் கட்சி பலமுறை கூறியிருக்கிறது. நாங்கள் இதை கடந்த காலத்தில் செய்துள்ளோம், எதிர்காலத்திலும் செய்வோம். ராகுல் காந்தி தனது பேச்சின்போது தினந்தோறும் அம்பானி மற்றும் அதானி குறித்து பேசி வருகிறார்.

ராமர் கோவிலுக்கு

தற்போது அம்பானி-அதானி குறித்து பேச வேண்டிய கட்டாயம் பிரதமர் மோடிக்கு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து பேசுவதற்கு முன்பு அதை பிரதமர் மோடி முழுமையாக படிக்க வேண்டும். ஆனால் அதைச் செய்யாமல், தன் மனதிற்கு தோன்றியதை பிரதமர் மோடி பேசி வருகிறார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இருப்பதாக அவர் கூறும் எதுவும் அதில் இடம்பெறவில்லை" என்று தெரிவித்துள்ளார்.