மோடி வேண்டாம் - வேறொருவர் பிரதமராக வேண்டும் - பாஜக மூத்த தலைவர் பரபரப்பு கருத்து
நாட்டின் மக்களவை தேர்தல் மிக பரபரப்பாக நடைபெற்று வருகின்றது.
மோடி
மோடி பிரதமர் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மீண்டும் முன்னிறுத்தப்பட்டுள்ளார் மோடி. அவர் மீது விமர்சனங்களை எதிர்க்கட்சியினர் வாரி இறைத்து வருகிறார்கள்.
நாட்டின் பணமதிப்பிழப்பு செயல், மணிப்பூர் கலவரம், குத்துசண்டை வீராங்கனைகள் பிரச்சனை, பெரும் விலையேற்றம், அம்பானி - அதானி விவகாரம், சீனா ஆக்கிரமிப்பு என மோடி மீது குற்றசாட்டுக்கள் அடுக்கப்படுகின்றன.
மோடி வேண்டாம்
இது எதிர்க்கட்சிகள் தரப்பில் இருப்பதை போலவே, பாஜகவிற்குள்ளும் இருக்கின்றது. கட்சியின் மூத்த தலைவராக பார்க்கப்படும் சுப்பிரமணியன் சாமி தொடர்ந்து மோடி மீது கடும் விமர்சனங்களை வைத்து வருகின்றார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொருளாதார அமைப்புகளில் பெரிய மாற்றங்கள் வரவில்லை. பொருளாதாரத்தில் யாருக்கு ஞானம் இருக்கோ அவர்களையும் அவர் சந்திக்கவில்லை. எல்லாம் எனக்கு தெரியும் என்ற பெருமை இருந்தது. சீனா 4 ஆயிரம் சதுர அடியை ஆக்கிரமித்து விட்டது. அது இப்போ மறைத்து வைத்திருக்கிறார்கள்.
வெளிநாட்டிலும் நம்மளுக்கு உதவியாக இல்லை. அமெரிக்கா கூட இந்தியாவை எதிரியாக பார்க்கிறது.
என்னோட கருத்து மோடிக்கு இரண்டு முறை வாய்ப்பு கிடைத்து விட்டது. இனி வேறொருவருக்கு கிடைக்கவேண்டும்.