ரேவண்ணா தப்பித்தது மோடிக்கு தெரியாதாம் - அதை நம்பணுமா? பிரியங்கா காந்தி சாடல்
கர்நாடக மாநில எம்.பி வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வீடியோதேர்தல் பிரச்சாரங்களில் பெரிதாக எதிரொலிக்கிறது.
ரேவண்ணா விவகாரம்
கர்நாடகாவின் ஹாசன் தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற வேட்பாளரான பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்தான விசாரணையில் ஒரு வருடத்திற்கு முன்பே இந்த விவகாரம் குறித்து பாஜக தலைமைக்கு(கூட்டணி உறுதிப்படுத்தப்படாத போதே) பாஜகவின் முக்கிய நிர்வாகி எச்சரிக்கை செய்ததாக கூறப்படுகிறது. ஆனாலும், தற்போது இரு கட்சிகளும் கூட்டணியில் இருக்கும் நிலையில், பாலியல் குற்றச்சாட்டப்பட்டவருக்கு பிரதமர் பிரச்சாரம் மேற்கொண்டார் என எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்.
முன்னதாக, குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணா வாக்களித்த உடனே நாட்டில் இருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது. பிரியங்கா கேள்வி இச்சுழலில் கர்நாடகா மாநிலத்தில் அடுத்த கடத்திற்கான தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ளது.
பிரியங்கா காந்தி சாடல்
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் கார்கே, மூத்த தலைவர் பிரியங்கா காந்தி மாநிலத்தின் கல்புர்கி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.இதில் பேசும் போது பிரியங்கா காந்தி மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
பெண்களின் தாலி பேசும் பிரதமர், ஒலிம்பிக் வீராங்கனைகளுக்கு பாலியல் விவகாரம் தொடர்பாக அமைதியாகதான் இருக்கிறார். மாநிலத்தில், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்ட்ட நிலையிலும் மோடியும் - அமித் ஷா ஆகியோர் ரேவண்ணாவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டனர். அவர்கள் மக்களுக்கு பதில்சொல்லியாக வேண்டும்.
குற்றம்சாட்டப்பட்டவர் நாட்டிலிருந்து தப்பிவிட்டார். ஆனால், இது பிரதமருக்கு தெரியாதாம் அதனை நாம் நம்ப வேண்டுமாம் . ரேவண்ணா இந்தியாவுக்கு திரும்பும் வரை மோடியிடம் இது குறித்து கேள்வி கேட்க வேண்டும் என பிரியங்கா காந்தி ஆவேசமாக பேசினார்.